×

புதுவையில் செல்லப் பிராணிகள் கண்காட்சி : பார்வையாளர்களை ரசிக்க வைத்த நாய்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று அசத்தின. புதுச்சேரியில் உள்ள தனியார் கிளப் சார்பில் ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 5-வது ஆண்டாக நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதுவை, தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மேன், ராட்வீலர், பொம்மரேனியன், பக், ராஜபாளையம் போன்ற வகைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

இந்த கண்காட்சி புதுச்சேரியில் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜூனியர், இண்டர் மீடியட், பிரடின், ஓபன் போன்ற 6 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்று உடல் கட்டமைப்பு, கட்டளைகளுக்கு கீழ் படிதல், மோப்ப திறன், நடை போன்றவற்றின் கீழ் அதிக மதிப்பெண் எடுத்த செல்லப்பிராணிகளான நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாய் கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து நாய்களின் திறமைகளை கண்டு வியந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry, Parents Exhibition, Dog Exhibition
× RELATED தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில்...