சென்னை: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 30-வது சாலைப்பாதுகாப்பு வாரம் இன்று தொடங்கி 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சேப்பாக்கம் முதல் தீவுத்திடல் வரை சாலைப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணியவேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது போன்ற விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சாலைப்பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
