×

விரைவில் துவங்க உள்ள சீசன் : உதகை - ரன்னிமேடு சிறப்பு ரயிலை இயக்க வலுக்கும் கோரிக்கை

உதகை: உதகையிலிருந்து ரன்னிமேடு வரை சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சீசன் துவங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும். .நீலகிரி மாவட்டம், குன்னுாரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன், 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ரன்னிமேடு ரயில்நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இயங்கி வருவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். கடந்த சில காலமாக பல்வேறு குறைபாடுகள் இருந்ததை அடுத்து ரன்னிமேடு ரயில் நிலையத்தை ரயில்வே துறை

புனரமைக்கும் பணிகளில் இறங்கியது. இதனையடுத்து குன்னுார் ரன்னிமேடு ரயில்வே ஸ்டேஷன் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

தடுப்புச்சுவர், இயற்கை காட்சிகளையும், அழகிய நீர்வீழ்ச்சியையும் கண்டு ரசிக்க நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த

பாரம்பரிய கம்பங்கள் மற்றும் விளக்குகள் போன்ற தோற்றத்துடன் புதிய கம்பங்களும், விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.காட்டேரி பூங்கா, நீர்வீழ்ச்சி, மலை ரயில்பாதை ஆகியவை அமைந்துள்ள இந்த பகுதியில், இரவு நேரங்களில் விளக்குகள் வசீகரிக்கின்றன. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ரன்னிமேடு பகுதிக்கு உதகையிலிருந்து சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உதகை, குன்னூர், கேத்தி போன்ற ரயில் நிலையங்கள் பாரம்பரிய கட்டிடங்களை கொண்டவைகளாகும். இதில் ரன்னிமேடு ரயில் நிலையம் காடுகள், குன்னூர் தேயிலை தோட்டங்களை அரணாக கொண்டது. தற்போது ரன்னிமேடு ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு வருவவதால் சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கை அழகை கண்டு களிக்க வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பயணிகள் ஒய்வெடுத்து இயற்கை காட்சிகளை கண்டுரசித்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு  செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ooty - Rannimedu , Ooty, Rannimedu, Special Train, Summer Season
× RELATED சென்னையில் அடுக்குமாடி...