×

விமானத்தில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பாரில் கரப்பான் பூச்சி

மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட இட்லி, சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போபாலில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் ரோஹித் ராஜ் சிங் என்பவர் நேற்று  முன்தினம் பயணம் செய்தார். அ்ப்போது, விமானத்தில் காலை சிற்றுண்டியாக அவருக்கு கொடுக்கப்பட்ட இட்லி, சாம்பாரில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து விமான சிப்பந்திகளிடம் புகார் செய்தபோது,  அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதோடு, அந்த சிற்றுண்டியை மற்றவர்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், விமான சிப்பந்திகள் அவரது பேச்சை கேட்கவில்லை.  இதனால், அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில்  அவர் பதிவிட்டார். ேமலும், தனக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியை அவர் திரும்ப கொடுத்து விட்டார். இது குறித்து மும்பை விமான நிலையத்திலும் புகார் செய்தார். ஆனால் இக்குற்றச்சாட்டை ஏர் இந்தியா மேலாளர் ராஜேந்திர  மல்ஹோத்ரா மறுத்துள்ளார். தங்களுக்கு அது போன்ற புகார் எதுவும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flight, idli, sambar, cockroach
× RELATED குடும்பத் தகராறில் பயங்கரம்: மனைவி,...