×

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பிரியாணி கடைக்காரர் ஓடஓட வெட்டிக்கொலை: பட்டபகலில் கூலிப்படை அராஜகம்

சென்னை:  சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி (43).  இவர் தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடையை  கடந்த 20 வருடங்களாக நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வாங்கிகொண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகில் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பகுதியில் பதுங்கி இருந்த  கூலிப்படையை சேர்ந்த 3 பேர் ரவியை கொலை செய்ய ஓடிவந்தனர். இதை பார்த்த ரவி அதிர்ச்சியில் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தை நோக்கி உயிர் தப்ப ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்ற கூலிப்படையினர் வழி மறைத்து தங்களிடம் இருந்த வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில்லேய  ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இதுகுறித்து தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டுயிருந்த ரவியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்  இவருக்கும் அதே பகுதியை சேரந்த ரவுடி ரேடியோ விஜி என்பவருக்கும்  முன்விரோதம் இருந்ததுள்ளது.

அதனாலயே ரவி வெட்டிக் கொள்ளப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித் துள்ளனர்.  இந்நிலையில் ரேடியோ விஜி, தனது கூட்டாளிகளுடன் நேற்று மதியம்  சேனியம்மன் கோயில் தெருவில் வியாபாரத்துக்கு தேவையான  கோழிக்கறி மற்றும் அரிசி, காய்கறிகள் வாங்கிக்கொண்டு தன்னுடைய சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை வழிமறித்து ரேடியோ விஜியும் அவரது கூட்டாளியும் சராமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரேடியோ விஜி மற்றும் அவனது கூட்டாளிகளை தேடிவருகிறார்கள் இறந்த ரவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Brihani ,Tondiarpet Police Station ,Ottapalam , Tondiarpet Police Station, Brihani Trader, Vettikkalai, Chattaigal, Mercenary, Anarchy
× RELATED ஒத்தப்பாலம் அருகே ரூ.25 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்