×

பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் 8ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் வரும் 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம்  அறிவித்துள்ளது. இதுகுறித்து, சிஐடியு மாநில தலைவரும், சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவருமான சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி :சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் நிலைய  கட்டுப்பாட்டாளர் இல்லாமல் இயக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். அவுட் சோர்சிங் முறையில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை நிர்வாகம் கைவிட வேண்டும். மெட்ரோ ரயில் ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு உள்ளது. இதை களைய வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில் ஊழியர்களுக்கு உணவகங்கள் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இரவு நேரம் பணிக்கு  வரும் ஊழியர்களுக்கு கேப் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை பேச முற்பட்ட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இல்லை என்றால் வரும் 8ம் தேதி முதல் மெட்ரோ ரயில் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை  தொடங்குவார்கள். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,DMRC , Negotiation, uninterrupted strike, metro rail staff association
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...