×

சனாதனத்திற்கு எதிராக அண்ணாவின் கருத்துக்களை முன்னெடுத்து செல்வோம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: அண்ணாவின் 50வது நினைவு நாளில் அவருடைய கருத்துக்களை  முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்போம் விசிக தலைவர் திருமாவளவன்  கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் முதன்மையான மாணாக்கராகத் திகழ்ந்து வைதீகத்தை, வருணக் கொள்கையை, சனாதனத்தை எதிர்த்த போராளி அண்ணா.  சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்த சமூக நீதிப் போராட்டத்தில்  என்றென்றும் பயன்படக்கூடிய கருத்தியல் ஆயுதங்களை வழங்கிச்  சென்றிருக்கும்  பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாளில் விசிக சார்பில் அவருக்கு வீர வணக்கங்களைச்  செலுத்துகிறோம்.  அவர் காட்டிய உறுதியோடு சனாதன எதிர்ப்புப்   போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என உறுதி ஏற்கிறோம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anna ,Thirumavalavan ,Sanatanam , We ,proceed,nna's views against, Thirumavalavan report
× RELATED அண்ணா நகரில் துப்பாக்கி சூடு? பெண் புகாரால் பரபரப்பு