×

லே விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

காஷ்மீர்: பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு வந்தார். லே விமான நிலையத்தில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மற்றும் அரசு உயரதிகாரிகள் பிரதகாஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடி, லே விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.பின்பு லே விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஸ்ரீநகர் செல்ல உள்ள பிரதமர் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு, அடிக்கல் நாட்டுவதுடன், லடாக்கில் பல்கலையை திறந்து வைக்க உள்ளார்.

லடாக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பாஜக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.  பிரதமர் மோடி வருகையைத் தொடர்ந்து, சிறீநகர் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு பாதுகாப்பு கருதித் துண்டிக்கப்பட்டுள்ளது. லடாக் நகரின் பாரம்பரிய உடை, தலைக்குல்லா அணிந்து மேடையில் பிரதமர் மோடி பேசினார். துணிச்சலான, வீரமுள்ள மக்களைக் கொண்ட மண் லடாக். கடந்த 1947, 1962 ஆண்டுகளாட்டும், கார்கில் போராகட்டும் வீரமுள்ள லடாக் மக்கள் நாட்டின் இறையான்மைக்கும், ஒற்றுமைக்கும் பாடுபட்டுள்ளனர்.

பிலாஸ்பூர் - மணாலி- லே இடையிலான ரயில்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு, டில்லியிலிருந்து லே வருவதற்கான தூரம் குறையும். இதனால், சுற்றுலா துறை பெரிதும் பயன்பெறும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை 15 நாட்களுக்கு அனுமதிக்கும் வகையில், நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதனால், லே வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Leh Airport , Lay Airport, laid the foundation, Prime Minister Narendra Modi
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...