×

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 3 தங்க கிரீடங்கள் மாயம்: 6 தனிப்படைகள் அமைப்பு

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இது தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக தெரிய வந்துள்ளது. நேற்று மாலை கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்.

பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.  இதற்கிடையே திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் காணாமல் போன கிரீடத்தை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அன்புராஜ் தெரிவித்துள்ளார். கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்நிலையில் திருப்பதியில் தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirupati Devasthanam ,Individuals Organization , golden crown, Govindaraja Swamy temple, Tirupati
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...