×

அமெரிக்கா அறிவிப்பை தொடர்ந்து அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தைநிறுத்தி கொள்வதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க கூறியதையடுத்து, இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்திக்கொள்வதாக ரஷ்யாவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் கடந்த 1987ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கும் அணு ஏவுகணைகளை இரு நாடுகளும் தயாரிப்பதற்கு  தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் (ஐஎன்எப்) அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனும், ரஷ்ய அதிபர் கோர்பசேவும் கையெழுத்திட்டனர். ஆனால். இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா அணு ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை மறுத்து வந்த ரஷ்யா, நிருபர்களையும், நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளையும் அழைத்து விளக்கம் அளித்தது.  அப்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், தடை செய்யப்பட்ட அணு ஏவுகணைகளை ரஷ்யா மீண்டும் தயாரிக்கும் என புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், ‘‘ஐஎன்எப் ஒப்பந்த விதிமுறைகளை ரஷ்யா மீறுவதால், இ்நத் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்’’ என்றார். இந்த விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புடின், தனது வெளியுறவுத்துறை அமைச்சர் சர்கே லாவ்ரோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே சோய்கு ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறுகையில், ‘‘ஐஎன்எப் ஒப்பந்தத்தை நிறுத்தி கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதனால் இந்த ஒப்பந்தத்தில் எங்கள் பங்களிப்பை நாங்கள் நிறத்திக் கொள்கிறோம். இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கா அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தும்வரை நாங்கள் பொறுத்திருப்போம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : launch ,Russia ,US , USA, nuclear missile barrier, Russia
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்