×

திருவள்ளுவர் பல்கலைக்கு நிரந்தர பதிவாளர் தேவை: பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை,: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் நிதி அதிகாரியை நியமிக்கக் கோரிய மனுவுக்கு பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்  கடந்த 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் மட்டுமே பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர பதிவாளர் இருந்ததாகவும், மற்ற ஆண்டுகளில் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத அதிகாரிகளும் பொறுப்பு பதிவாளர்களாக நியமிக்கப்பட்டு வந்ததாகவும் அதனால் நிரந்தர பதிவாளரை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வேலூர் ஊரிஸ் கல்லூரி முன்னாள் பேராசிரியர் இளங்கோவன்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, பதிவாளர் பதவி மட்டுமல்லாமல், தேர்வு கட்டுப்பாட்டாளர், நிதி அதிகாரியும் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Thiruvalluvar University , Tiruvalluvar University, Government, HC notice, Notice
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...