×

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ வலுவான கூட்டணி

கன்னியாகுமரி: தமிழகத்தில் பா.ஜ. வலுவான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பிரதமர் மோடி வரும் 19ம் தேதி அரசு விழா மற்றும் பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து ெகாள்ள  கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். இந்த விழாவை நடத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாக மைதானம் தேர்வு ெசய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பந்தக்கால்  நாட்டு விழா நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பந்தக்கால் நாட்டினார்.

பின்னர்  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:  நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் பட்ஜெட்டை எள்ளிநகையாடிய எதிர்கட்சிகள், பின்னர்  அடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ வலுவான கூட்டணியாக அமையும். 30 இடங்களில் கூட்டணி வெற்றி பெறும். அதுபோல் தேசிய அளவில் 350 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் பணி நிறைவடைந்த திட்டங்களை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,election ,Tamil Nadu , Ponn rathakrisnan, BJP, parliament elections
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...