×

ெகாடநாடு கொலை, கொள்ளை வழக்கு சயான், மனோஜின் ஜாமீன் ரத்தாகுமா?: வரும் 8ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து, காவலாளியை கொலை செய்து விட்டு பணம்-ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இவ்வழக்கில்  10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.  இதுதொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கொடநாடு வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, தமிழக போலீசார் இருவரையும் டெல்லியில் கைது செய்தனர். மேலும், இருவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டி கோர்ட்டில் அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஜன 18ம் தேதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த  மாவட்ட நீதிபதி வடமலை, பிப்.2ம் தேதி இருவரையும் ஆஜராக உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்றைய விசாரணைக்கு வாளையார் மனோஜ் உள்ளிட்ட 9 பேரும் நேரில் ஆஜராகினர். இதில் உதயகுமார் என்பவர் மட்டும் உடல்நலக்குறைவால் ஆஜராகவில்லை. காலை 10.30 மணிக்கு நீதிபதி வடமலை விசாரனையை துவங்கினார். அரசு தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை அரசு வக்கீல் நடராஜ் ஆஜரானார்.  சயான், மனோஜ் தரப்பில் சென்னையை சேர்ந்த பிரபாகர்  ஆஜரானார். சுமார் 5 மணி நேரம் இரு தரப்பினரும் வாதிட்டனர். இருதரப்பு வாதத்திற்குபின், அடுத்தக்கட்ட விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி வடமலை தெரிவித்தார். மேலும், அன்றைய தினமே அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

உண்மையை கூற அனுமதி... நீதிபதியிடம் சயான் மனு
கொடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் கோர்ட்டில் நேரடியாக கூற அனுமதி அளிக்க வேண்டும் என சயான், வக்கீல் ஆனந்த் மூலமாக நீதிபதி வடமலையிடம் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை இதுதொடர்பான விசாரணையும் வரும் 8ம் தேதி நடத்தப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Manoj ,Cyan , Killing case, Cyan, Manoj
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4...