×

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் கண்டோன்மெண்ட் போர்டு உத்தரவு

குன்னூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்பவரை பழனியை  சேர்ந்த கவுசல்யா காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கவுசல்யாவின் உறவினர்கள் உடுமலை பஸ் நிலையம் அருகே சங்கரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் கவுசல்யா படுகாயமடைந்தார். கவுசல்யாவுக்கு  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மத்திய அரசின் வெலிங்டன் கன்டோன்மெண்ட்  அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

இதன்பின் கடந்த வருடம் கவுசல்யா கோவையை சேர்ந்த பறை இசை கலைஞரான சக்தி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கவுசல்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து கன்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Uthumalai Kausalya Suspendant ,Indian ,Cantonment Board , Indian sovereignty, Udumalai Kausalya, Suspension, Cantonment Board
× RELATED சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி