×

திருமலை நாயக்கர், கட்டபொம்மன் கோட்டை உட்பட 12 பாரம்பரியமிக்க கோட்டைகள், கோயில்கள் மறுசீரமைப்பு: அடுத்த மாதம் பணிகளை தொடங்க முடிவு

சென்னை: திருமலை நாயக்கர், கட்டபொம்மன் கோட்டை உட்பட 12 பாரம்பரியமிக்க கோட்டைகள், கோயில்கள் மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துளளது. தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில பாரம்பரிய கட்டிடங்களை மாநில தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதாவது, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட கட்டிடங்கள் மாநில தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடத்தின் பராமரிக்கும் பணி அந்த துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த நிலையில், அந்த கட்டிடங்கள் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக, மாநில தொல்லியல் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதன்படி, தற்போது, கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 கோயில்கள், விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுருகம் மலைக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் உள்ள ஆலம்பறை கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உதயகிரி கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மருதுபாண்டியர் கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மன் கோட்டை, பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா கோட்டை, நாகையில் உள்ள டச்சு கல்லறை உட்பட 12 கோட்டைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மாநில தொல்லியல் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த டெண்டரில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம், அடுத்த மாதத்திற்குள் மறு சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 12 Traditional Fortresses ,Temple Restructuring: The Next Month , Thirumalai Nayakar, Kattabomman Fort
× RELATED திருமலை நாயக்கர் கட்டிய பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்