ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு பேராசிரியர் ஜெயராமனை விடுதலை செய்ய வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் தொடர் எதிர்ப்புக்கிடையில் கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். மக்களின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ்பாதுகாப்புடன் அத்திட்டம் தொடர்பான வேலைகளைச் செய்ய முயன்றபோது பொதுமக்களைத் திரட்டிப்போய் கேள்விகேட்ட பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ்   ஆகியோரை தமிழக அரசு கைது செய்திருக்கிறது.

மேலும், போராட்டக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமனின் மனைவி சித்ரா மற்றும் கலையரசி, ஜெயந்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிந்திருக்கிறது எடப்பாடி அரசு.இனிமேலாவது மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதை எடப்பாடி அரசு கைவிட்டு, கைதான பேராசிரியர் ஜெயராமன் மற்றும்  ராஜ்   ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: