×

விதர்பா-சவுராஷ்டிரா மோதும் ரஞ்சி கோப்பை பைனல் இன்று தொடக்கம்

நாக்பூர்: விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, நாக்பூரில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் விதர்பா அணியுடன் நட்சத்திர வீரர்கள் அடங்கிய சவுராஷ்டிரா அணி மோதுகிறது. மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் ரஞ்சி கோப்பையில் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளன. இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது அணி பெருமையைப் பெறும் முனைப்புடன் பைஸ் பஸல் தலைமையிலான விதர்பா அணி களமிறங்குகிறது.

அனுபவ வீரர் வாசிம் ஜாபர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். உமேஷ் யாதவ், ரஜ்னீஷ் குர்பானியின் பந்துவீச்சும் சவுராஷ்டிரா வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. ஜெய்தேவ் உனத்காட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் செதேஷ்வர் புஜாரா இடம் பெற்றிருப்பது மிகப் பெரிய பலமாகும். அவருடன் ஹர்விக் தேசாய், ஸ்னெல் பட்டேல், ஷெல்டன் ஜாக்சன் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் தர்மேந்திர சிங் ஜடேஜாவை சவுராஷ்டிரா அதிகம் நம்பியுள்ளது. நடப்பு சீசனில் அவர் 52 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vidarbha-Saurastra ,Munna Ranji Cup Final , Vidarbha, Saurastra, Ranji Cup Final
× RELATED ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான...