×

காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்குதல் அதிமுகவின் கைப்பாவையாக போலீசார் செயல்படக் கூடாது: திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை: காங்கிரஸ் நிர்வாகி மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல் துறை செயல்படக்கூடாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் ஆனந்த் சீனிவாசன். அவர் நேற்று தனது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் சக்தி திட்டத்தின் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்தியுள்ளார்.  

அமைதியாக நடந்து கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கையினை சீர்குலைத்து வன்முறையை ஏவிவிட்டு, அவரையும், அவருடைய மனைவி மற்றும் தாயார் ஆகியோர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவருடைய இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தி, அதிமுகவினர் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழகத்தில் எந்த பகுதியிலும் நடக்காத வகையில் தமிழக காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படாமல், தனக்குரிய கவுரவத்தோடும், கண்ணியத்தோடும் செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,administrator ,Thirunavukarajar ,Congress , Congress, AIADMK, Thirunavukkarar
× RELATED பாஜகவுடன் கூட்டணி, பிரதமர் மோடியின்...