×

மங்களூரு விமான நிலையத்தில் 2 மாத குழந்தைக்கு கொரோனா பரிசோதனையா? அதிகாரிகள் விளக்கம்

மங்களூரு:மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (எம்ஐஏ) ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு மாத குழந்தை குறித்து தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம் வாயிலாக வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், விதிகளுக்கு மாறாக மங்களூரு விமான நிலையத்தில் இரண்டு மாத குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  இதுகுறித்து கோவிட் -19 நோடல் அதிகாரி டாக்டர் அசோக் கூறுகையில், “இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கோவிட் -19 க்கு பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது. எனக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கோரினேன். அவர்கள் விதிமுறைகள் தெரியாமல் செய்திருக்கிறார்கள். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கோவிட் -19 க்கு எந்த சோதனையும் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” என்றார். அபுதாபியில் இருந்து மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்தது….

The post மங்களூரு விமான நிலையத்தில் 2 மாத குழந்தைக்கு கொரோனா பரிசோதனையா? அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Mangalore Airport ,Mangalore ,Mangalore International Airport ,MIA ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி