×

மாநில அரசின் சார்பில் தென்பெண்ணையாறு தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் உறுதி

சிக்கபள்ளாபுரா: கடும் வறட்சியில் உள்ள சிக்கபள்ளாபுரா மற்றும் கோலார் மாவட்டங்களில் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தும் தென்பெண்ணையாறு தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:“கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உருவாகும் பெண்ணையாறு, கர்நாடக மாநிலத்தில் மட்டுமில்லாமல், தமிழகம், ஆந்திரா மாநிலங்களிலும் பாய்கிறது. மழை காலத்தில் நதியில் பெருக்கெடுக்கும் தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தென்பெண்ணையாறு (தட்சண பினாகினி) நதியில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வறட்சி பாதித்த சிக்கபள்ளாபுரா மற்றும் கோலார் மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தென்பெண்ணை தடுப்பணை திட்டம் செயல்படுத்த முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் பயிர் செய்ய முடியாத நிலை உள்ளதால், தடுப்பணை திட்டம் மூலம் அந்த குறை நீங்கும்’’என்றார்….

The post மாநில அரசின் சார்பில் தென்பெண்ணையாறு தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tenpenna River barrage ,Chikkaballapura ,Kolar ,State Government ,Dinakaran ,
× RELATED கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய...