×

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு : எல்கார் பரிஷத் வழக்கில் புனே பேராசிரியர் கைது

புனே: எல்கார் பரிஷத் வழக்கில் கோவா மேலாண்மை பயிற்சி நிலைய பேராசிரியர் ஆன்ந்த் டெல்டும்ப்டே கைது செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டு இயக்த்துடன் அவருக்கு தொடர்பு இருப்பது குறித்த வழக்கில் புனே சிறப்பு நீதிமன்றம் வெள்ளியன்று ஆனந்த் டெல்டும்ப்டே தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் டெல்டும்ப்டேவை புனே போலீசார் கைது செய்தனர்.

ஆனந்த் டெல்டும்டேவை காவலில் எடுத்து விசாரிக்க புனே போலீசார் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக செயற்பாட்டாளர்கள் 7 பேரின் வீடுகளில் புனே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த 7 பேரில் ஆனந்த் டெல்டும்ப்ட்டும் ஒருவர். 2017-ம் டிசம்பர் 31-ம் தேதி எல்கார் பரிஷத் என்ற பெயரில் புனேவில் திறந்தவெளி பொதுநிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற பீமாகோரேகான் போராட்ட 200-வது ஆண்டு விழாவில் வன்முறை வெடித்தது. எனவே வன்முறைக்கு எல்கார் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே பொறுப்பு என்று கூறி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுதா பரத்வாஜ், கவிஞர் பி.வரவரராவ் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Pune Professor ,Elgar Parishad , எல்கார் பரிஷத் வழக்கு, பேராசிரியர் ஆன்ந்த் டெல்டும்ப்டே, கைது
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்