×

நாகர்கோவில் அருகே வீடு புகுந்து பயங்கரம் சொத்து தகராறில் கணவன், மனைவி படுகொலை: கூலிப்படை ஏவி தீர்த்து கட்டியதாக தகவல்

ஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே கணவன், மனைவி சொத்து தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.நாகர்கோவில் அடுத்த தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (42). ேதாவாளையில் பூக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு ஆர்த்தி (16)  என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.  கல்யாணி கதவை திறந்தபோது வீட்டுக்குள் புகுந்த கும்பல்,  கல்யாணியை அரிவாளால் வெட்டியது. இதில் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து இறந்தார். இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்திருந்த முத்துவும், மகள் ஆர்த்தியும் வந்து தடுக்க முயன்றனர்.  அவர்களையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்து அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் வந்தனர். கல்யாணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, படுகாயம் அடைந்த முத்துவையும், ஆர்த்தியையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் முத்து இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சொத்து தகராறில், கொலைகள் நடந்ததாக தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கல்யாணியுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். இவர்கள் குடும்பத்துக்கான இரண்டரை ஏக்கர் தோப்பு, தோவாளையில் இருந்தது. இந்த நிலத்தை விற்றுவிட முடிவு செய்து, கல்யாணியின் சகோதரர்களில் ஒருவரான  சுடலையாண்டி இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இவர் பத்திர எழுத்தராகவும் இருப்பதால், ஆவணங்களை எல்லாம் தயாரித்துள்ளார். பின்னர், சகோதர, சகோதரிகளுக்கு விற்பனை பணத்தை பிரித்து கொடுத்துவிட்டு  சொத்தை  தனது பெயருக்கு மாற்றியதாக தெரிகிறது. இந்தநிலையில், நிலத்தையொட்டி நான்கு வழிச்சாலைக்கான பணிகள் தொடங்கின. சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை நான்கு வழிச்சாலைக்காக அரசே கையகப்படுத்தியது. அப்போது நிலத்துக்கு அதிக தொகை தரப்பட்டது.  சுடலையாண்டிக்கு லட்சக்கணக்கில் பணம் வந்ததால் சகோதர, சகோதரிகள் சுடலையாண்டியிடம் கூடுதல் பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணம் தரவில்லை.இதுபற்றி, மற்றொரு சகோதரியான தனம்மாளின் மகன் இசக்கிராஜா எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் 31.1.19 அன்று ₹6 லட்சம் தருவதாக கல்யாணியிடம் சுடலையாண்டி உறுதி  அளித்துள்ளார். சொன்னடி பணம் தராததால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கல்யாணி, சுடலையாண்டியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.  தகராறு முடிந்த 2 மணி நேரத்தில்  கல்யாணி, அவரது கணவரை கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி கொலை செய்துள்ளது. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.சுடலையாண்டி தனது குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதால், போலீசார் தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : slaughter house ,Nagarcoil , Husband, wife slaughter, house , Nagarcoil
× RELATED நாகர்கோவில் - நெல்லை பயணம் கண்டக்டர்...