×

மதிமுக பேச்சாளர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: மதிமுகவின் ஊடக விவாதக்குழு உறுப்பினர் கோவை தனமணி வெங்கடபதி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் ெபாறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்ைக:மதிமுக ஊடக விவாதக்குழு உறுப்பினரும் பேச்சாளருமான கோவை தனமணி வெங்கடபதி, கட்சியின் கண்ணியத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் முரண்பட்டு செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர்  உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவரது கணவர் வெங்கடபதி, கோவை மாநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஸ்ரீமான் சுந்தரம் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி  வைக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : speaker ,party , Removing, MDM speaker,party
× RELATED மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு...