×

‘உஜாலா’ திட்டத்தின் கீழ் தபால் நிலையங்களில் டேபிள் பேன், எல்.இ.டி பல்பு, டியூப்கள் விற்பனை

சென்னை: எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இனி டேபிள்பேன், எல்.இ.டி பல்புகள், எல்.இ.டி ட்யூப் லைட்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்த வாரத்தில் அமலாகிறது. எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் மத்திய அரசு ‘உஜாலா’ என்ற திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின்சாரத்தை சேமிக்கும் நோக்கத்துடன் 25 கோடிக்கு மேற்பட்ட எல்.இ.டி பல்புகளும், 22 லட்சத்திற்கு மேற்பட்ட எல்.இ.டி டியூப் லைட்களும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்விசிறிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்வாரியத்துடன் இணைந்து இந்த திட்டம் கடந்த 2017ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. அதன்படி, மின்வாரிய அலுவலகங்களில் ஸ்டால் போன்று அமைக்கப்பட்டு எல்.இ.டி பல்பு, எல்.இ.டி டியூப் லைட் மற்றும் மின்விசிறி ஆகியவை விற்பனை செய்யப்பட்டன.  இதற்கு அடுத்தபடியாக ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் எல்.இ.டி பல்பு, எல்.இ.டி டியூப் லைட்கள் மற்றும் டேபிள் பேன் ஆகியவற்றை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: எரிசக்தியை சேமிக்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் இந்த வார இறுதிக்குள் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. உஜாலா திட்டத்தின் கீழ் அஞ்சலகங்களில் எல்.இ.டி பல்புகள், எல்.இ.டி டியூப் லைட்கள் மற்றும் டேபிள் பேன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. சந்தைவிலையை விட இது குறைவாகதான் இருக்கும். தற்போது அஞ்சலகங்களில் இடவசதிக்கு ஏற்றவாறு இது அமைக்கப்படும். இதற்கென தனி கவுண்டர்கள் அமைக்க முடியாது. அஞ்சலகங்களில் ஒரு சிறு இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. ஏற்கனவே, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. அடுத்தகட்டமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. குறைந்த விலையில் மிகச்சிறப்பான சேவையை வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Table bin ,LDB ,Ujala ,post stations , Energy, table bane, LED bulb, tube, Ujala project
× RELATED தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு இல்லை:...