×

ஆசிய கோப்பை கத்தார் சாம்பியன்

அபு தாபி: ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்திய கத்தார் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அபு தாபியில் நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில், தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கத்தார் அணி இடைவேளையின்போது 2-0 என முன்னிலை வகித்தது. அந்த அணியின் அல்மோயஸ் அலி நடப்பு தொடரில் தனது 9வது கோல் அடித்து ஒரே ஆசிய தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற கத்தார் ஆசிய கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 5வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஜப்பான் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Cup Qatar , Asian Cup, Qatar Champion
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு