×

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இத்தாலி முன்னிலை

கொல்கத்தா: இந்திய அணியுடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரின் தகுதிநிலை முதல் சுற்றில், இத்தாலி அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய இந்த தொடரில், முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனுடன் இத்தாலியின் ஆண்ட்ரியாஸ் செப்பி மோதினார். இதில் செப்பி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இத்தாலி அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.

2வது ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் மோதிய இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 4-5, 3-6 என தோல்வியைத் தழுவ, இத்தாலி 2-0 என முன்னிலையை அதிகரித்துக் கொண்டது. இந்த நிலையில், இன்று நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் ஷரண் ஜோடி கட்டாய வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Davis Cup ,Italy , Davis Cup Tennis, Italy
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்