×

தொழிலதிபர் சிவசங்கரனின் பல கோடி சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

சென்னை: தொழிலதிபர் சிவசங்கரனின் பல கோடி சொத்தை முடக்கியதாக அமலாக்கப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக தொழிலதிபர் சிவசங்கரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுப்பட்டதாகவும் சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த புகாரை அடுத்து சிவசங்கரனின் ரூ.222.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கி வழங்கிய ரூ.470 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ வாழ்க்கைத் தொடர்ந்து சிவசங்கரன் மீது அமலாக்க இயக்குநரகமும் வழக்கு பதிவு செய்தது. மேலும் ஏற்கனவே சிவசங்கரன் நிறுவனங்கள் மீது ரூ.523 கோடி கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில் இரு கடன் தொகையையும் சிவசங்கரன் திரும்பிச் செலுத்தவில்லை என சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

முடக்கப்பட்ட சொத்து விவரம்:
முடக்கப்பட்ட சொத்துக்கள் சிவசங்கரனின் சிவா குழும நிறுவனங்களுக்கு சொந்தமானவை ஆகும். ஆக்செல் சன்ஷைன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் தியாகராயர் நகரில் உள்ள சிவசங்கரன் சொத்துக்களை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivasankaran , Businessman ,Sivasankaran's,crore assets,freezing ,enforcement action
× RELATED வெளிநாட்டில் இல்லாத நிறுவனங்களில்...