×

ஜன.11-ம் தேதி வரை திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தான் அனுமதி: தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்: மதுரைக் கிளை

மதுரை: வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு உரிய முறையில் பரிசீலித்து திங்கள்கிழமைக்குள் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார்கள் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரேனா காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு அதி முக்கியத்தவம் அளிக்க இயலாது என கூறியுள்ளது. 50% இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் தியேட்டரில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தகவல் தேவை எனவும் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதி கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. எனவே மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என மதுரைக் கிளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.100% இருக்கைகள் உடன் செயல்பட மத்திய அரசு கடும் எதிர்ப்பு: பொங்கல் முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. எனவே 100% பார்வையாளர்களை ஒரே நேரத்தில் அனுமதித்தால் கொரோனா பரவும் சூழல் ஏற்படும். ஆகவே தமிழக அரசு அளித்த அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. …

The post ஜன.11-ம் தேதி வரை திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தான் அனுமதி: தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்: மதுரைக் கிளை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Maduraik Branch ,Madurai ,Madur Branch ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...