×

பெங்களுருவில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது..... விமானி உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களுருவில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையத்தில் மிராஜ் 2000 என்ற விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றோரு விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் 27-ம் தேதி  கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜாகுவார் போர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹதேம்ர் பகுதியில் திடீரென தரையில் விழுந்து மோதியதும்  விமானம் தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல் கடந்தாண்டு ஜூன் மாதம் குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian Air Force ,Bengaluru , Mirage 2000, Aircraft, HAL, Pilot Dead, Bengaluru
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...