×

பாண்டியாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இந்தியாதான் கவலைப்பட வேண்டும்: ஐசிசி சி.இ.ஓ. பதில்

மும்பை: ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இந்தியாதான் கவலைப்பட வேண்டும் என ஐசிசி-யின்தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது பெண்கள் குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் பிசிசிஐ இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் விசாரணை தாமதமாகி வருவதால் தற்போது இருவரையும் விளையாட அனுமதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஐசிசி-யின்தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனிடம், ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: ‘‘இந்த விவகாரத்தில் வீரர் இடம்பிடித்துள்ள நாட்டிற்குத்தான் கவலை. பொதுவாக இந்திய அணி சிறந்த பண்புடையது. அவர்கள் போட்டிக்கு வந்த பிறகு நடுவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,CEO ,Pandia ,ICC , ICC, hardik Pandya, David Richardson
× RELATED கிருஷ்ணகிரியில் பரபரப்பு சிஇஓவை அவதூறாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்றம்