×

எச்-1பி விசா குலுக்கல் முறையில் மாற்றம் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை: இந்தியர்களுக்கு பாதிப்பு

மும்பை: அமெரிக்காவில் மேல்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எச்-1பி விசா குலுக்கல் முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையால் இந்தியாவில் படித்தவர்கள் எச்-1பி விசா பெறுவது இனி மிகவும் கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 65 ஆயிரம் எச்-1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க கல்லூரிகளில் மேல்படிப்பு படித்தவர்களுக்கு கூடுதலாக 20 ஆயிரம் எச்-1பி விசாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும். முதலில் மேற்படிப்பு படித்தவர்களுக்கான குழுக்கள் நடக்கும். இதில் தேர்வு செய்யப்படாதவர்கள், வழக்கமான குலுக்களில் மீண்டும் இடம் பெறும் வாய்ப்பு இருந்தது. தற்போது இந்த நடைமுறையை மாற்றுவதற்கான அறிவிப்பை அமெரிக்க உள்துறை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய முறைப்படி முதலில் வழக்கமான குலுக்கல் நடத்தப்படும். இதில் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்தவர்கள் எச்-1பி விசாக்கள் பெற வாய்ப்பு அதிகமாக இருக்கும். இது இந்தியாவில் படித்தவர்கள் எச்-1பி விசா பெறும் வாய்ப்பை குறைக்கும். இதுகுறித்து குடியுரிமை சட்டங்களுக்கான சர்வதேச அமைப்பு பிரகோமென் கூறுகையில், ‘‘2020ம் ஆண்டு எச்-1பி விண்ணப்ப சீசன் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. முதலில் ரெகுலர் பிரிவில் உள்ள 65 ஆயிரம் எச்-1பி விசாக்களுக்கான குலுக்கல் நடக்கும். அதன்பின் முதுநிலை பட்டதாரிகளுக்கான 20 ஆயிரம் எச்-1பி விசா குலுக்கல் நடக்கும். இதன் மூலம் அமெரிக்காவில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்’’ என கூறியுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சைரஸ் டி மேத்தா கூறுகையில், ‘‘இந்தியாவில் முதுநிலை மருத்துவப்படிப்பு படித்த டாக்டர்கள், ஐஐடியில் பட்டம் பெற்றவர்களுக்கு கூட இனிமேல் எச்-1பி விசா பெறுவது சிரமமாக இருக்கும்’’ என்றார்.

இந்தியர் உட்பட 9 பேர் விசா மோசடியில் கைது
அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர்கள், அமெரிக்க இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் டெட்ராய்ட் நகரில் ‘பார்மிங்டன்’ என்ற பெயரில் தனியார் போலி பல்கலைக்கழகம் நடத்தியுள்ளனர். மாணவர் விசாவை முறைகேடாக பயன்படுத்தி வெளிநாட்டினர் 600 பேரிடம் பணம் பெற்று அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்க வைத்துள்ளனர். இதை கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத் துறையினர், விசா மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 8 பேரை கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளும் இந்திய தூதரக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : educators ,Indians ,United States , H-1B visa shift, priority,educators,United States: affecting Indians
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...