×

இன்று ஆசிய கோப்பை கால்பந்து பைனல் ஐந்தாவது முறையாக சாம்பியனாகுமா ஜப்பான்: முதல்முறை கனவில் கத்தார்

அபுதாபி: இன்று அபுதாபியில் நடைபெறும்  17வது ஆசியக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில்  5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஜப்பானும், முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் கத்தாரும் மோத உள்ளன. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில்(யுஏஈ) 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. ஆசியா, ஓசியான் பகுதிகளில் உள்ள 32 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. ஜன.5ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜப்பான்-கத்தார் அணிகள் மோத உள்ளன.  ஜப்பான் அணி 5 முறையாகவும், கத்தார் முதல்முறையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. லீக் சுற்றில் துர்க்மெனிஸ்தான், ஓமன், உஸ்பெஸ்கிஸ்தான் அணிகளையும்,  ரவுண்ட் -16ல்  சவுதி அரேபியாவையும், காலிறுதியில் ஓமனையும்,  அரையிறுதியில்  ஈரானையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு  தகுதிப்பெற்ற 1992, 2000, 2004, 2011 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது ஜப்பான். துடிப்பான இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியாக ஜப்பான் இருக்கிறது.

அதனால் இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது ஜப்பான். அதன் மூலம் 2022ல் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாட நேரடியாக  தகுதிப் பெறும்.தீவிர, தொடர் பயிற்சிகளின் மூலம் கத்தார் முதல் முறையாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. உலக கோப்பை கனவில் உள்ள அது லீக் போட்டிகளில்  சவுதி அரேபியா,  லெபனான், வட கொரியா அணிகளையும், ரவுண்டு-16ல்  ஈராக்கையும், காலிறுதியில் தென்கொரியா, அரையிறுதியில் யுஏஈ அணிகளை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெறாவிட்டாலும் கத்தார் 2022 உலக கோப்பையில் விளையாடும். காரணம் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அது ஏற்கனவே உலக கோப்பை  போட்டிக்கு தகுதிப் பெற்று விட்டது. ஆனாலும் சாம்பியனாகி தகுதிப் பெற்றால் கவுரமாக இருக்கும் என்று கத்தார் விரும்புகிறது. அதை அந்த அணி வீரர்களிடம் கத்தார் நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்றனர். அதனால் இன்று நடைபெறும் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Japan ,Champion ,Asian Cup Football ,Qatar , Japan's Asian,Cup Football, Final Fifth Time ,Champion Japan, First Kiss in Qatar
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...