×

2020, 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்காக முன்னுரிமை வீரர்கள் பட்டியலில்

* பி.வி.சிந்து, தங்கவேல் மாரியப்பன்
புதுடெல்லி: ேடாக்கியோவில் 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக், பாரா ஓலிம்பிக், 2024 ஒலிம்பிக் ேபாட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தயார்–்படுத்துவற்கான முன்னுரிமை பட்டியலில் பி.வி.சிந்து, தமிழகத்தின் தங்கவேல் மாரியப்பன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்தப் போட்டிகளில் மட்டுமின்றி 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் ேபாட்டிகளில்  பங்கேற்கும் இந்திய வீரர்களின் திறனை மேம்படுத்த  மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதற்காக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(சாய்) முன்னுரிமை பட்டியல் ஒன்றை   நேற்று வெளியிட்டுள்ளது.

அதில் தடகளம், பாட்மின்டன் உட்பட பல்வேறு விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்த 23 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.  பாட்மின்டன் பிரிவில் வீராங்கனைகள்  பி.வி.சிந்து, சாய்னா நேவால், சிக்கி ரெட்டி, மேக்னா, பூர்வஷா ராம் வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சமீர் வர்மா, பிரணவ் சோப்ரா, மனு அத்ரி ஆகியோர் உள்ளனர். அதேபோல் பாரா ஒலிம்பிக் முன்னுரிமை பட்டியலில்  வருண் பாஹடி, சுமீத், சரத்குமார், சந்திப் சவுத்ரி,  ரிங்கு,  அமீத் உட்பட பலர் இடம் பிடித்துள்ளனர். இதில் கவனிப்பு பட்டியலில்  தமிழகத்தின் தங்கவேல் மாரியப்பன், ராம்பால் சாஹர், தீபா, ராதா, ரக்‌ஷிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இப்படி முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளு சிறப்பு கவனத்துடன் பயிற்சிகள் மேற்கொள்ள சாய் உதவி செய்யும்.

சீறிய தீவுகள்
பாகிஸ்தான் - மேற்கு இந்தியதீவுகள் பெண்கள் அணிகளுக்கு  இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கராச்சியில் நடைப்பெற்றது. முதலில் விளையாடியா மேற்கு இந்தியதீவுகள் அணி 20 ஓவர்களில்  2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான்18 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் மேற்கு இந்திய தீவுகள் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

யுஏஈ வெற்றி
நேபாளம் - ஐக்கிய அரபு குடியரசு(யுஏஈ) நாடுகளுக்கு இடையிலான  முதல் டி20 போட்டி துபாயில் நேற்று நடைப்பெற்றது. முதலில் விளையாடிய யுஏஈ 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நேபாளம் 20 ஓவரில்  7 விக்கெட்கள் இழப்புக்கு  132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் யுஏஈ 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அடிலெய்டு அசத்தல்
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகிறது. நேற்று லான்ஸ்டம் நகரில் நடைப்பெற்ற 47வது போட்டியில்  ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இதில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றிப் பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Olympic Games , 2020, 2024,List,top players, Olympic Games
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...