×

தமிழகம் முழுவதும் டிஎஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகடத்தல் தடுப்புப்பிரிவுக்கு புதிய போலீஸ் அதிகாரிகளை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் பலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை  மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார், தூத்துக்குடி சமூக நீதித்துறை  டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார், வேலூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுரேஷ்,  தர்மபுரி குற்ற ஆவண காப்பாக டிஎஸ்டி முருகானந்தம், தஞ்சாவூர் மதுவிலக்கு  டிஎஸ்பி முத்துராஜ், திண்டுக்கல் பயிற்சி மைய டிஎஸ்பி கதிரவன், ஈரோடு  ஏஎல்ஜிஎஸ்சி டிஎஸஅபி ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மதுவிலக்கு டிஎஸ்பி  ரவிச்சந்திரன், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து  யாராவது ஒரு டிஎஸ்பி ஆகியோரை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலை  தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியின் திருச்சி முகாமில் ஆஜராக சம்பந்தப்பட்ட  மாவட்ட காவல் ஆணையர்கள், எஸ்.பிக்கள் அனுப்ப டிஜிபி உத்தரவு  பிறப்பித்துள்ளார். அதேபோல், 14 இன்ஸ்பெக்டர்களும், 25 எஸ்ஐ மற்றும்  எஸ்எஸ்ஐகளும், 36 காவலர்களும் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் இன்பெக்டர்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை மவுண்ட், ஐபிஆர்இசி பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வடக்கு மண்டலத்துக்கும், சென்னை விஆர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தா, மேற்கு மண்டலத்துக்கும், அயனாவரம் ஐபிஆர்இசி இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சென்னை பெருநகர காவல்துறைக்கும், சிஎஸ்சிஐடி நிர்வாகப் பிரிவு இன்ஸ்பெக்டர் நீலாவதி, சென்னை பெருநகர காவல்துறைக்கும், திருவள்ளூர் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சென்னை பெருநகர காவல்துறைக்கும், அயனாவரம் இன்ஸ்பெக்டர் தளவாய் சாமி சிவில் சிப்ளை சிஐடி பிரிவுக்கும், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி குற்றப்பிரிவுக்கும், காஞ்சிபுரம் பாலுசெட்டிபாளையம் இன்ஸ்பெக்டர் பிரபாகர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றும் 20 இன்ஸ்பெக்டர்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : inspectors ,Tamil Nadu , Tamilnadu,Inspector, dsp
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...