×

உயிருக்கு ஆபத்து என காதல் ஜோடி கதறும் வாட்ஸ் அப் வீடியோ : குமரியில் பரபரப்பு

திங்கள்சந்தை : குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், இளம்பெண்ணுடன் அமர்ந்து பேசும் வாட்ஸ்அப் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், இளம்பெண் ஒருவருடன் அறைக்குள் அமர்ந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையாடும் வீடியோ  ஒன்று வாட்ஸ் அப் மூலம் நேற்று வெளியானது. அதில் பேசும் வாலிபர், நாங்கள் இருவரும் காதல் ேஜாடி. வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் உயிருக்கு  ஆபத்து உள்ளது. நாங்கள் கோர்ட்டில் சரண் அடைய போகிறோம். யார், யாரெல்லாமோ மிரட்டுகிறார்கள்.  இயக்குனர் என்று பேசி ஒருவர் மிரட்டுகிறார். எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களை காப்பாற்றுங்கள் என கூறுகிறார். இந்த வீடியோ நேற்று வெளியானது முதல் காதல் ேஜாடி யார்? என்பது பற்றிய பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து விசாரித்த போது, அந்த வாலிபர் இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்தவர் என்பதும், அந்த இளம்பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்கள். அங்கு காதல் வயப்பட்டு இளம்பெண், வாலிபருடன் ஓடி வந்துள்ளார். பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இளம்பெண் குடும்பத்தினர் டாக்டர்கள், இன்ஜினியர்களாக உள்ளனர். மேலும், ஏற்கனவே தனது மகளை காணவில்லை என்று, சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டு உள்ளது. அதன்பேரில் சென்னையில் இருந்து போலீசார் வந்து இரணியலில் விசாரணை நடத்தி உள்ளனர். அதனால், இந்த வீடியோவை காதல் ேஜாடி வெளியிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Love couple, screams, vats up video, risk of life
× RELATED வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பள்ளிகளை...