×

பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் தியேட்டர்கள் அரசு உத்தரவை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு உத்தரவை முறையாக பின்பற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திரையரங்குகளில் உரிய வாகன  கட்டணம் வசூலிப்பது இல்லை. உணவுப் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது, மேலும் திரையரங்குகளில் உணவு  பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. குறிப்பாக குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. இலவச குடிநீர்  கூட வழங்குவது இல்லை. அங்கு விற்கக்கூடிய  உணவுப் பொருட்கள் எல்லாம் அதிகப்படியான விலைக்கு விற்கப் படுகிறது. இதனால், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கூடுதல் செலவாகிறது.  மேலும், சோதனை என்ற பெயரில் உடல் ரீதியான சோதனை மேற்கொள்ளக்கூடாது, மெட்டல் டிடெக்டர் சோதனை முறையை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அரசு உரிய உத்தரவிட்டும் அந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளபடியே வசூலிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court , Movie Theaters, Parking Fee, Government Order
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...