×

350 நாளில் திரும்ப செலுத்தும் வகையில் சிறு வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் கடன்: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: சென்னையில் சிறுவணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு 350 நாட்களில் திரும்ப  செலுத்தும் வகையில், 10 ஆயிரம் கடன் வழங்கப்படுவதாக அமைச்சர் செல்லூர்  ராஜு கூறினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, பாண்டிபஜார் கிளையில் 5 பேருக்கு சம்பளக் கடன் 17 லட்சமும், 7 பேருக்கு பணிபுரியும் மகளிர் கடன் 44 லட்சமும், 138 பேருக்கு சிறுவணிக கடன் 29.55 லட்சமும், 14 சுயஉதவிக் குழுக்களுக்கு 28 லட்சமும், 4 மாற்றுத்திறனாளிக்கு 1.75 லட்சமும் என மொத்தம் 168 பயனாளிகளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் சிறப்பு கடன் உதவிகள் வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: நடப்பு நிதி ஆண்டில்  டிசம்பர் 2018 வரை 79800 பேருக்கு 723 கோடி நகைக்கடன் அளித்துள்ளது. சென்னை நகரில், சிறுவணிகம் செய்யும் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக 147 நாட்களில் திரும்ப செலுத்தும் வகையில் சிறுவணிக கடனாக தனிநபர் ஒருவருக்கு 10,000 வரை அனுமதித்து வந்துள்ளதை அதிகப்படுத்தும் வகையில் ஏப்ரல் 2018 முதல் 25,000ஆக உயர்த்தி 350 நாட்களில் திரும்ப செலுத்தும் விதமாக 10.5 சதவீத வட்டியில் வழங்கி வருகிறது. மேலும், மகளிர் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு பணிபுரியும் மகளிர் கடனாக 7,00,000 வரையும், சுயஉதவிக்குழு கடனாக 10,00,000 வரையும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Seloor Raju ,businesses , Small Businessman, Minister Seloor Raju
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...