காந்தியடிகள் 72வது நினைவு நாள் கவர்னர், முதல்வர் மலர்தூவி மரியாதை

சென்னை: காந்தியடிகளின் 72வது நினைவு நாளை முன்னிட்டு கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:காந்தியடிகள் 72வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம் மற்றும் அமைச்சர்கள், சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் மற்றும்அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், சென்னை, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சியில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...