×

பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் குவித்தோவா

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடைபெறும் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார்.கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அசரென்கா கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் அசரென்காவின் சர்வீஸ்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த குவித்தோவா 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா தனது 2வது சுற்றில் சக ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவுடன் மோதவிருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kuwitova , Petersburg Open Tennis, Guwieta
× RELATED ஆஸி. ஓபன் அரை இறுதியில் நடால்: குவித்தோவா முன்னேற்றம்