×

சீன மாநாட்டில் வலியுறுத்தல் அணு ஆயுத ஒழிப்பில் இரட்டை நிலை கூடாது

பீஜிங்: ‘அணு ஆயுத பெருக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது’ என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
 அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைய சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இக்குழுவில் தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக  உள்ளன.  இந்தக் குழுவில் இடம் பெற இந்தியாவும், பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன. ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, இந்த குழுவில் புதிய உறுப்பினரை சேர்க்க  முடியாது என்பதால் எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இந்தியா தீவிர  முயற்சிகளில் ஈடுபட்டது.
ஆனால், சீனா அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை காரணம்  காட்டி, தனது வீட்டோ  அதிகாரத்தின் மூலம் இந்தியாவை சேர்க்க சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அணு ஆயுத பரவல் தடுப்பு சம்பந்தமான 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர், சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங் அளித்த பேட்டியில், “அணு ஆயுத பரவல் ஒழிப்பு, அணு ஆயுத ஒழிப்பு, அமைதி வழி அணு ஆயுத பயன்பாடு ஆகிய மூன்றிலும் சர்வதேச நாடுகள் பன்முகத்தன்மையுடன் ஒத்துபோக வேண்டும். அணு ஆயுதத்தை ஒழிக்கும் செயல்பாட்டில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது” என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : convention ,Chinese , Chinese Conference, Nuclear Weapons, Dual Level
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...