×

முலாம்பழம் கிலோ 30க்கு விற்பனை

வேலூர் : வேலூரில் ஆந்திர முலாம்பழம் கிலோ 30க்கு விற்பனையானது. வேலூரில் உள்ள பழமண்டியில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, வாழைப்பழம் உள்ளிட்ட ஏராளமான பழவகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து முலாம்பழம் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இன்று முலாம்பழம் 1கிலோ 30க்கு விற்பனை செய்யப்பட்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த முலாம்பழம், நோய்களை தடுக்க கூடியது. கர்ப்பிணிகள் உண்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதுகெலும்பு வளர்ச்சியும் நன்றாக இருக்கும். வாய்ப்புண், தொண்டை புண் ஆகியவற்றை போக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Musk melon ,Rs.30 per kg
× RELATED சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில்...