×

திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் மர்ம யாகம் : போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிர்வாண சாமியார் ஒருவர் நடத்திய மர்ம யாகத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 14 கி.மீ நீளத்தில் கிரிவல பாதை உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களாக மர்ம நபர் ஒருவர் யாகம் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கிரிவல பாதையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் அமர்ந்து சாமியார் ஒருவர் யாகம் நடத்தி வந்துள்ளார். காவல்துறையினரை கண்டதும் அவரது அறைக்கு சென்று விட்டார். இதையடுத்து அந்த சாமியாரை பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினரிடம், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கிரிவல பாதையில் யாகம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்றும், யாகம் நடத்த யார் அனுமதியளித்தனர் என்றும் காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். அதற்கு தங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறை அதிகாரிகளையும் தங்களுக்கு தெரியும் என மிரட்டும் வகையில் அந்த சாமியார் பேசியுள்ளார். முதலில் திருவண்ணாமலைக்கு அவர் மட்டுமே வந்ததாகவும், அதனை தொடர்ந்து பெண்கள் உள்பட அவரது சிஷ்யர்கள் 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து யாகம் நடத்திய காரணம் பற்றி சாமியாரிடம் திருவண்ணாமலை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிவலப்பாதையில் ஏராளமான மடங்கள் இருப்பதால் அங்கு உள்ளவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும், இந்த யாகத்தில் பிண்ணனி முக்கிய பிரமுகர்கள் யாரேனும் உள்ளனரா என்றும் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்துகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிவலிங்கம் உள்ள இடங்களில் தொடர்ந்து 6 நாட்களுக்கு சோம ருத்ர யாகம் நடத்துவதாகவும், கடந்த ஆண்டு நடத்த முயற்சி செய்த நிலையில் அது தோல்வியடைந்ததால் இந்த ஆண்டு நடத்தியதாக அந்த சாமியார் கூறியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கடந்த வருடம் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பின்னர், இதேபோல இந்த நிர்வாண சாமியார் யாகம் நடத்த முயற்சி செய்ததாகவும், அப்போது திருவண்ணாமலை பாதையில் இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அதை தடுத்தி நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sameer Mirmaj Yagam ,investigations ,Thiruvannamalai Kiravela , Thiruvannamalai,Kirivala path,AP sage,Yagna,Inquiry
× RELATED சிறப்பு புலனாய்வுக்காக 5 பெண்...