×

தேவதானப்பட்டி பகுதியில் வாழைக்கு மீண்டும் வந்தது வாழ்வு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் நடப்பாண்டில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, சாத்தாகோவில்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, எருமலை நாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, வைகைபுதூர் உட்பட 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

நடப்பாண்டில் சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் அதிகளவு வாழை சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதிகளவு வாழை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக சாகுபடி பரப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் மீண்டும் வாழை சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு வருட சாகுபடியான வாழைக்கு கன்று வாங்குதல், குழியெடுத்தல், நடவு, களையெடுத்தல், தொழு உரம், ரசாயன உரடுமிடுதல், தொடர்ந்து 8 மாதத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல், ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. பின்னர் தார் போட்டவுடன், வாழையின் பக்கக்கன்று மூலம் இலை அறுவடை செய்யப்படுகிறது. இலை போதுமான விலை கிடைத்தால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். இல்லையென்றால் வாழை தார் விலை கிடைக்கவேண்டும். நடப்பாண்டில் அரசு பாலித்தீனுக்கு தடை விதித்ததால் அனைத்து ஓட்டல்களிலும் வாழை பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வாழை இலைக்கு தொடர்ந்து சீரான விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Devadanapatti , Devadanapatti, banana, cultivation
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...