×

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ஆந்திர மாநில சாமியார் நிர்வாண யாக பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் நிர்வாண யாக பூஜை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான பகுதியில் ஆந்திரமாநிலத்தை சேர்ந்த பொக்குல கொண்ட கைலாயஸ்ரம பீடாதிபதி சூரியபிரகாசனந்த சாமியார் நிர்வாண நிலையில் நேற்று முன்தினம் முதல் யாக சாலை பூஜை செய்து வருகிறார். இப்பூஜை காலை 5 மணி நேரமும், மாலை 5 மணிநேரமும் என இரண்டு வேளை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. உலக நன்மைக்காக நடத்தி வரும் இந்த பூஜை வரும் 10ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பூஜைக்கு 25 ஆயிரம் லிட்டர் நெய், பலவகையான மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இதேபோல் கடந்த ஆண்டு நிர்வாணமாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் யாகம் நடத்தி வருவதை அறிந்த அப்போதைய மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, கிரிவலப்பாதையில் நிர்வாண பூஜை நடத்த தடை விதித்து, பூஜை நடத்தியவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இதேபோன்று கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிர்வாண பூஜை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,Samyar Niranam Yaga Pooja ,Thiruvannamalai , Thiruvannamalai, Samiyar, Yaga Pooja
× RELATED மழைக்காலம் துவக்கம், நோய் தாக்கும்...