×

பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா? இறுதிக்கெடு நெருங்குவதால் பிரதமர் தெரசா மே-க்கு சிக்கல்

லண்டன்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை திருத்தம் செய்து தாக்கல் செய்ய பிரதமர் தெரசா மே-க்கு பிரிட்டன் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 29 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 230 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தெரசா மே தப்பி பிழைத்துள்ளார். இந்த நிலையில் பிரெக்சிட் ஒப்பந்தத்தை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மக்கள் முடிவெடுத்தனர். அதற்கான கடைசி தேதி இந்த ஆண்டு மார்ச் 29 ஆகும். இன்னும் 10 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு வீழச்சி ஏற்படா வண்ணம் ஒப்பந்தத்துடன் வெளியேறும் முயற்சியில் தெரசா மே இறங்கியுள்ளார். இதற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள அயர்லாந்து உறுப்பினர்கள் தடையாக உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Teresa May ,final , Theresa May, Brexit Vote,
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...