திருவண்ணாமலையில் அனுமதியின்றி இயங்கிய காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 15 சிறுமிகள் மீட்பு, காப்பகத்துக்கு ‘சீல்’

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அனுமதியின்றி இயங்கிய தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிர்வாகி கைது செய்யப்பட்டார். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் 15 சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. திருவண்ணாமலை ரமணா நகர் விரிவாக்கம் மகாசக்தி நகரில் அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடப்பதாகவும், இங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த காப்பகத்தில் கலெக்டர் கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் வந்து சோதனை நடத்தியதில் 2 கம்யூட்டர்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதில் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதைத்தொடர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்த 8 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார்(31) என்பவர் காப்பகத்தில் மேலாளராக வேலை செய்தது தெரியவந்தது. இவர் காப்பக நிர்வாகியும் நண்பருமான நந்தகுமார்(35) என்பவருடன் சேர்ந்து காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

கம்யூட்டரில் தங்களுக்கு ஆபாச படங்களை போட்டுக்காட்டி அதை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி வந்ததாகவும், ஆபாச படத்தில் உள்ளபடி தங்களிடம் நடந்து கொள்ள முயன்றதாகவும், எதிர்த்து கேள்வி கேட்கும் சிறுமிகளை சாப்பாடு வழங்காமல் பட்டினிபோட்டு கொடுமை செய்ததாகவும் பீர் திருவிழா என்கிற பெயரில் மதுகுடிக்க வைத்து ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் சிறுமிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காப்பகத்தை பூட்டி சீல் வைத்தனர். திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைமறைவாக உள்ள காப்பகன் நிர்வாகி நந்தகுமாரை தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இளம்பெண்களுக்கு பாலியல்...