×

செய்யாறில் இருந்து ஆரணிக்கு சென்றபோது நடுரோட்டில் அரசு பஸ் படிக்கட்டு உடைந்தது: பயணிகள் இறக்கி விடப்பட்டனர்

செய்யாறு: செய்யாறில் இருந்து ஆரணி சென்ற அரசு டவுன் பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்ததால் பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர்.  செய்யாறில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று, ஆரணிக்கு புறப்பட்டு சென்றது. மாலை நேரம் என்பதால்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பஸ்சில் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆரணி கூட்ரோடு அருகே சென்றபோது பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த  டிரைவர், பஸ்சை உடனடியாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, பஸ் ஓரங்கட்டப்பட்டு பயணிகள் அனைவரும்  கீழே இறக்கிவிடப்பட்டனர். அனைவரையும் மாற்று பஸ்சில் செல்லுமாறு கண்டக்டர் தெரிவித்தார். பின்னர், பஸ்சை பணிமனைக்கு ஓட்டி சென்றனர்.  பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் அவர்கள் அவதிக்குள்ளாகினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arakkon ,Ariani ,passengers , Ceyyaru, Arani, bus
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து