×

யமுனை தூய்மை திட்டத்தில் அலட்சியம்... தலா ரூ.10 கோடி உத்தரவாத தொகை செலுத்த 3 மாநிலங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: யமுனை நதியை சுத்தப்படுத்தும் பணியை குறையில்லாமல் முழுமையாக செய்து முடிப்பதாக உறுதி அளிக்கும் வகையில், தலா ₹10 கோடி உத்தரவாத தொகையை செலுத்தும்படி உத்தர பிரதேசம் உட்பட  3 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக இடைக்கால அறிக்கையை டெல்லி முன்னாள் தலைமை செயலாளர் சைலஜா சந்திரா மற்றும் பிஎஸ் சஜ்வான் தலைமையிலான கண்காணிப்பு குழு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில், நதி உயிர்ப்புடன் வாழ கடும் போராட்டத்தை சந்தித்து வருகிறது எனவும், குறைந்தபட்ச சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்தா விட்டால் நதியை புணரமைக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், யமுனையில் சிலைகளை கரைக்கக் கூடாது எனவும், டெல்லியில் இதற்காக பல்வேறு செயற்கைக் குளங்களை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ் குமார் தனது உத்தரவில் கூறியதாவது: யமுனை சுத்தப்படுத்தும் பணியில் திருப்தி ஏற்படவில்லை. டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 3 மாநிலங்களும் இந்த பணியை மேலும் காலம் தாமதம் செய்வதை தவிர்ப்பதை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்யவேண்டும். நகராட்சி திடக்கழிவை அப்புறப்படுத்துவதையும், சாக்கடைகளை சுத்தப்படுத்துவதையும் 3 மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். இந்த தூய்மை திட்டத்தை குறையின்றி செய்து முடிப்பதாக உறுதி அளித்து, 3 மாநிலங்களும் தலா ரூ.10 கோடியை உத்தரவாத தொகையாக தீர்ப்பாயத்தில் ஒரு மாத்திற்குள் செலுத்த வேண்டும். கண்காணிப்பு குழு பரிந்துரை செய்தபடி சுத்தப்படுத்தும் பணி நடைபெறா விட்டால் இந்த தொகையை 3 மாநிலங்களும் இழக்க நேரிடும். இவ்வாறு உத்தரவில் அவர் கூறினார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states ,Yamuna , Yamuna River, Rs 10 crore guarantee, National Green Tribunal
× RELATED பண்ருட்டி ஏரி உடைந்தது அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் வீணானது