×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சயான், மனோஜ் பிப்.2ல் ஆஜராக ஊட்டி நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதி காவலாளி கொலை, கொள்ளை  சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில், 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். நாளடைவில், 10 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, கொடநாடு சம்பவத்தில் முதல்வர் பழனிசாமிசொன்னதன் பேரில்தான் ஆவணங்களை எடுக்க சென்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக கொலை நடந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் டெல்லியில் தமிழக போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்ததால் ஜாமீனில் உள்ளனர். இதைத்தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்யும்படி அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வடமலை, இருவரையும் 24ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை. இதனால், மீண்டும் 29ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இருவரும் ஊட்டி மாவட்ட கோர்ட்டில் ேநற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி வடமலை விசாரணை மேற்கொண்டார். இருதரப்பு வாதத்திற்கு பின், வருகிற 2ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட்டில் இருந்து இருவரும் தங்களது வக்கீல் செந்தில்குமார், ஆனந்தன் ஆகியோருடன் வெளிேயறினர். அப்போது, அவர்களை பின் தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனை தவிர்க்க இருவரையும் வக்கீல்கள் சங்க அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். ஆனால், அதற்கு அரசு வக்கீல்கள் பாலநந்தகுமார், தேவராஜ், மாலினி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் 2 பேரையும் வக்கீல் செந்தில்குமார் காரில் ஏற்றி வெளியே அனுப்பினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,manoj , Kodanad murder, robbery case, Cyan, Manoj,
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...