×

துபாயில் ஹெலிகாப்டர் மூலம் 700 அடி உயரத்தில் இருந்து சைக்கிளில் குதித்து ஸ்காட்லாந்து வீரர் சாகசம்

ஸ்காட்லாந்து : ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிறிஸ் கைல் ஹெலிகாப்டர் மூலம் துபாயின் மிக உயரமான Burj Al Arab ஹோட்டலின் மேல் தளத்தில் சைக்கிளில் குதித்து சாகசத்தில் ஈடுபட்டார். அவரது இந்த சாகசம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டரில் இருந்து முதலில் 16 அடி உயரத்தில் இருந்தபடி சைக்கிளில் குதிக்கும் கிறிஸ்,பின்னர் சரிவான பலகையில் இறங்கி ஹோட்டலின் லிப்ட் வழியாக சைக்கிளில் வந்தபடி சுமார் 700 அடி உயரத்தை கடந்து செல்கிறார்.

தொடர்ந்து அந்த ஹோட்டலின் நீர்விளையாட்டுக்களுக்குப் பயன்படும் குழாய்கள், பூங்காக்கள், சுவர்கள், சாலைகள் என பார்க்கும் இடங்களில் எல்லாம் சைக்கிளை செலுத்தி பிரமிப்பூட்டினார். வழியில் தென்படும் சுவர்கள், கட்டிடங்களில் மேல்தளங்கள் என தரையை ஒட்டிச் செல்வதை போல அவர் எந்த வித அச்சமும் இல்லாமல் சாதாரணமாக ஒட்டிச் செல்வது பார்வையாளர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது. அவரது இந்த சாகசம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : player ,Scotland ,Dubai , Scotland, helicopter, Chris Kyle, adventure
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...